திருமணம் நிச்சயம் ஆனதை வீடியோ மூலம் அறிவித்த ஸ்மிர்தி மந்தனா!


திருமணம் நிச்சயம் ஆனதை வீடியோ மூலம் அறிவித்த ஸ்மிர்தி மந்தனா!
x
தினத்தந்தி 21 Nov 2025 10:58 AM IST (Updated: 21 Nov 2025 11:07 AM IST)
t-max-icont-min-icon

பிரபல இசையமைப்பாளரான பலாஷ் முச்சால் என்பவரை ஸ்மிர்தி மந்தனா கரம் பிடிக்க உள்ளார்.

மும்பை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.

மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா வருகிற 23-ந்தேதி அவரை கரம் பிடிக்க உள்ளார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள், வீராங்களைகள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்மிர்தி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணம் நிச்சயமானதை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் ஆகியோருடன் நடனமாடுவது போன்ற விடியோவை வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story