

சென்னை,
ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
புதிய தரவரிசைப் பட்டியலில், 790 ரேட்டிங் புள்ளிகளுடன், உலகின் சிறந்த பேட்டராக மந்தனா முதலிடத்தை தக்க வைத்துள்ளார். மேலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 8-வது இடத்தில் இருந்து டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் சரிந்து தற்போது 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டி-20 பேட்டர் தரவரிசையிலும் மந்தனா ஒரு இடம் முன்னேறி தற்போது 2-வது இடத்தை பிடித்துள்ளார். மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் மந்தனாவின் இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.