சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா


சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா
x
தினத்தந்தி 28 Jun 2025 9:38 PM IST (Updated: 3 July 2025 6:55 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் டி20 போட்டியில் இந்தியாவுக்காக அரை சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார்.

நாட்டிங்காம்,

இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இன்று வரலாற்று சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

இடதுகை வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா 62 பந்துகளில் 3 சிக்சர்கள், 15 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் சேர்த்துள்ளார்.

பெண்கள் டி20 போட்டியில் இந்தியாவுக்காக அரை சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார்.

இந்த போட்டியில் தலையில் காயம் ஏற்பட்டு விளையாடாத கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீராங்கனை ஆவார். அவரை தொடர்ந்து மந்தனா 2-வது வீராங்கனையாக திகழ்கிறார்.

உலக அளவில், பெண்கள் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்தவர்கள் வெறும் 5 வீராங்கனைகளே உள்ளனர். அந்த வரிசையில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவும் இணைந்துள்ளார்.

1 More update

Next Story