பெண்கள் டி20 கிரிக்கெட்: ஸ்ம்ரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை

இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் ஸ்ம்ரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று நடந்த இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் பவர்பிளேயில் 55 ரன்களை குவித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த பார்ட்னர்ஷிப்பின் மூலம் ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா புதிய சாதனையை படைத்து உள்ளனர். பெண்கள் டி20 போட்டிகளில் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி 1152 ரன்களுடன் இந்தியாவின் வெற்றிகரமான ஜோடி ஆக உருவெடுத்துள்ளார்.

இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 1000 ரன்கள் பார்ட்னர்ஷிப்க்கு மேல் குவித்த ஒரே இணையாக இவர்கள் உள்ளனர். மேலும் உலகில் 7 வது அதிக ரன்களை குவித்த ஜோடியாக ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இணை உள்ளனர்.

பெண்கள் டி20 போட்டிகளில் இந்தியாவுக்கான அதிகபட்ச வெற்றிகரமான பார்ட்னர்ஷிப் பின்வருமாறு:-

1152 - ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா

990 - ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ்

853 - ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com