இங்கிலாந்துக்கு எதிரான டி20: ஸ்மிருதி மந்தனா மோசமான சாதனை

இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்மிருதி மந்தனா
Published on

சென்னை,

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி செம்ஸ்போர்டில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஹர்மன் பிரீத் கவுர் இல்லாததால் ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மந்தனா

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஷபாலி வர்மாவுடன் களம் புகுந்த மந்தனா, போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாரன் பெல் வீசிய பந்தில், சார்லி டீனிடம் கேட்ச் கொடுத்து மந்தனா வெளியேறினார்.

சர்வதேச டி20-ல் மோசமான சாதனை

இதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில் போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த முதல் இந்திய வீராங்கனை என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். இது, அவரது சர்வதேச டி20 கெரியரில் 6-வது டக்-அவுட் ஆகும்.

டக்-அவுட் பட்டியலில் இரண்டாவது இடம்

இந்திய மகளிர் அணியில் அதிக முறை டக்-அவுட் ஆன சாதனையை ஷபாலி வர்மா (7 முறை) வைத்துள்ளார். தற்போது மந்தனா 6 டக்-அவுட்களுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருடன் இணைந்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 188 ரன்கள் எடுத்தது. இதை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com