ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்

சிறந்த ஒருநாள் மற்றும் டி20 பேட்டர் தரவரிசையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்
Published on

மும்பை,

பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 பேட்டர் தரவரிசையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராகத் திகழ்கிறார்.

அதேபோல, சர்வதேச டி20 தரவரிசையிலும் 1 இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதே தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அலானா கிங், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சோஃபி எக்லெஸ்டோனை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கேப்டன் கவுர் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 இடங்கள் பின் தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com