சில நேரங்களில் நான் விளையாடும் முறைக்கு தோல்வியும் வரும் - அபிஷேக் சர்மா

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே மற்றும் ஹாம்ப்ஷைர் அணிகள் விளையாடின.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடரில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த இந்தியாவின் அபிஷேக் சர்மா ((314 ரன்) தொடர் நாயகன் விருதை வென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

காரை பரிசாக பெறுவது மகிழ்ச்சியான விஷயம். டி20 உலகக் கோப்பை வென்ற அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வருவது என்பது எளிதான விஷயமாக இருக்காது. நான் என்னுடைய ஆட்டத்தில் மிகவும் கடினமாக உழைத்தேன். அதே சமயத்தில் உங்களுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு தேவை. எனக்கு இது ஆரம்பத்தில் இருந்தே கிடைத்தது.

ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தால் அணி வெற்றி பெற வேண்டும். சில நேரங்களில் நான் விளையாடும் முறைக்கு தோல்வியும் எனக்கு வரும். ஆனாலும் தொடர்ந்து நான் விளையாடும் முறையில் என்னுடைய செயல் திறனில் நான் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் பவர் பிளேவில் சுழல் பந்துவீச்சாளர்கள் வந்தால் நான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் இருந்தது. மேலும் எந்த பிரிமியம் பாஸ்ட் பவுலராக இருந்தாலும் நான் முதல் பந்தையே அடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com