தென்னாப்பிரிக்கா டி20 லீக் 2024; தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் சூப்பர்கிங்ஸ் அணிகள் மோதல்

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் 2-வது சீசன் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
image courtesy; twitter/@SA20_League
image courtesy; twitter/@SA20_League
Published on

கேப்டவுன்,

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென்னாப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்றது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்து இருந்தனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றிருந்தன. இதன் முதலாவது சீசன் இந்த ஆண்டு முடிவடைந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கோப்பையை வென்றது.

இந்நிலையில் 'எஸ்ஏ20 லீக்'-ன் 2-வது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. 6 நகரங்களில் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் சூப்பர்கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com