ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி


ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி
x

image courtesy:ICC

பவுமா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

புலவாயோ,

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி புலவாயோவில் ஜூன் 28-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் வழக்கமான கேப்டனான டெம்பா பவுமா காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக கேஷவ் மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி 2-வது போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

கேஷவ் மகராஜ் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், கார்பின் போஷ், டோனி டி சோர்ஜி, ஜுபைர் ஹம்சா, க்வேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி நிகிடி (2-வது போட்டிக்கு மட்டும்), ப்ரீனெலன் சுப்ரயன், கைல் வெர்ரேய்ன் மற்றும் கோடி யூசுப், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் லெசெகோ செனோக்வானே

1 More update

Next Story