தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான 2வது டெஸ்ட்: இன்று தொடக்கம்

முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
image courtesy: @ZimCricketv
image courtesy: @ZimCricketv
Published on

புலவாயோ,

கேசவ் மகராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக ஜிம்பாப்வே கடுமையாக போராடும். இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com