தென் ஆப்பிரிக்கா வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இதன் 2-வது டெஸ்ட் நேற்று நிறைவடைந்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தோல்வி கண்ட பாகிஸ்தான் சில புள்ளிகளை இழந்த நிலையில் 8-வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் பின்வருமாறு:-

1. தென் ஆப்பிரிக்கா - 69.44 சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 63.73 சதவீதம்

3. இந்தியா - 50.00 சதவீதம்

4. நியூசிலாந்து - 48.21 சதவீதம்

5. இலங்கை - 45.45 சதவீதம்

6. இங்கிலாந்து - 43.18 சதவீதம்

7. வங்காளதேசம் - 31.25 சதவீதம்

8. பாகிஸ்தான் - 27.78 சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 24.24 சதவீதம்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com