இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள்: 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள்: 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
Published on

பார்ல்,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

கேப்டன் பவுமா 110 ரன்களும், வான்டெர் துஸ்சென் 129 (96) ரன்கள் உதவியுடன் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் கே.எல். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 51 ரன்களில் வெளியேறினார். தவன் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கு ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஸ்ரேயஸ் அய்யர்(17), ரிஷப் பண்ட்(16), வெங்கடேஷ் அய்யர்(2) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல தவறினர்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com