நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
image courtesy: T20 World Cup twitter
image courtesy: T20 World Cup twitter
Published on

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் சந்திக்கின்றன.

5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரைஇறுதியை எட்டும். 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த்து. இதையடுத்து நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com