சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்


சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்
x

ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

கெய்ன்ஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும்.

இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பந்துவீச செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

1 More update

Next Story