தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாண்ட்லி-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Image Courtesy : Cricket Southafrica 
Image Courtesy : Cricket Southafrica 
Published on

பிரிட்ஜ்வாட்டர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ, வயது 20. இவர் 2020 ஆம் ஆண்டு நடந்த இளையோர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடியவர்.

இவர் கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே மாண்ட்லி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமாலோவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், சவுத்மீட் மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதாகவும் பிரபல கிரிக்கெட் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் ஆடிவரும் குமாலோவின் இந்த நிலை குறித்து அந்த கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள செய்தியில், ""முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய மொண்ட்லிக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறோம். மொண்ட்லிக்கு உதவியவர்களுக்கு, குறிப்பாக சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் அவருக்கு உதவிய, உதவி வரும் சுகாதார சேவை ஊழியர்களுக்கு எங்கள் நன்றி." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com