டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரலையில் காண மெரினாவில் சிறப்பு ஏற்பாடு

இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரலையில் காண மெரினாவில் சிறப்பு ஏற்பாடு
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை நேரலையில் காண மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

5 மணி முதல் 7 மணி வரை நாட்டுப்புற பாடல், பெரிய மேளம், மல்லர் கம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதன் பின்னர், 7 மணிக்கு இறுதிப்போட்டி நேரலை செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com