இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தொடருகிறார். பயிற்சியின் போது காயமடைந்த நுவான் பிரதீப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கசுன் ரஜிதா சேர்க்கப்பட்டார். ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் 16 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளார். 16 பேர் கொண்ட இலங்கை அணிக்கு, அந்த நாட்டு விளையாட்டு மந்திரி துலாஸ் அழகப்பெருமா நேற்று ஒப்புதல் வழங்கினார். இலங்கை வீரர்கள் இன்று இந்தியாவுக்கு புறப்படுகிறார்கள்.

இந்திய தொடருக்கான இலங்கை அணி பட்டியல் வருமாறு:-மலிங்கா (கேப்டன்), குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ், ஷனகா, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, உதனா, பானுகா ராஜபக்சே, ஒஷாடா பெர்னாண்டோ, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, குசல் மென்டிஸ், சன்டகன், கசுன் ரஜிதா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com