இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா ராஜினாமா

அவரது நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜி னாமா செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா ராஜினாமா
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு செயற் குழு கூட்டம் கொழும்பில் நேற்று நடந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அவரது நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜி னாமா செய்தனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடு மற் றும் கிரிக்கெட் வாரிய தலைமை மீதான புகார் கள் காரணமாக ஷம்மி சில்வாவை அழைத்து பதவியை விட்டு விலகும்படி ஏற்கனவே இலங்கை அதிபர் குமார திசநாயக்க அறிவுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து பதவி காலம் இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலை யில் ஷம்மி சில்வா ஒதுங்கியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com