இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி லக்னோவில் வருகிற 24-ந் தேதியும், 2-வது மற்றும் 3-வது 20 ஓவர் போட்டிகள் தரம்சாலாவில் முறையே 26, 27-ந் தேதியும் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் ஆஷியன் டேனியல் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்ட இலங்கை அணியில் இடம் பெற்று இருந்த பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோ, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷரா, சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். முழு உடல் தகுதியுடன் இல்லாததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பனுகா ராஜபக்சே ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்குரிய இலங்கை 20 ஓவர் அணி வருமாறு:-

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மென்டிஸ், அசலன்கா (துணை கேப்டன்), தினேஷ் சன்டிமால், தனுஷ்கா குணதிலகா, கமில் மிஷரா, ஜெனீத் லியானேஜ், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமரா, பினுரா பெர்னாண்டோ, ஷிரன் பெர்னாண்டோ, மகேஷ் தீக்ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆஷியன் டேனியல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com