இந்தியாவுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரை நடத்தும் இலங்கை..?

கோப்புப்படம்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதாக இருந்தது. மேலும் இத்தொடர் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடாங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் பாதுகாப்பு காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது.
இருப்பினும் இந்திய அணி தரப்பில் இருந்து இதுவரை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை பிசிசிஐ இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






