டி20 கிரிக்கெட்டில் மோசமான உலக சாதனை படைத்த இலங்கை வீரர்


டி20 கிரிக்கெட்டில் மோசமான உலக சாதனை படைத்த இலங்கை வீரர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 Sept 2025 12:30 AM IST (Updated: 25 Sept 2025 12:31 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கையின் தசுன் ஷனகா டக் அவுட் ஆனார்.

அபுதாபி,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான உலக சாதனையை படைத்துள்ளார்.

அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சோகமான சாதனையை ஷனகா படைத்துள்ளார். இது அவரது 14-வது டக் அவுட் ஆகும். இதன் மூலம், தலா 13 டக் அவுட்களுடன் இருந்த வங்கதேசத்தின் சவுமியா சர்க்கார் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 12 டக் அவுட்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:

தசுன் ஷனகா (இலங்கை): 14 டக் அவுட்கள்

சவுமியா சர்க்கார் (வங்கதேசம்): 13 டக் அவுட்கள்

பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து): 13 டக் அவுட்கள்

கெவின் ஓ'பிரைன் (அயர்லாந்து): 12 டக் அவுட்கள்

ரோகித் சர்மா (இந்தியா): 12 டக் அவுட்கள்

1 More update

Next Story