அரைஇறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி.. கேப்டன் தசுன் ஷனகா வெளியிட்ட பரபரப்பு பதிவு

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியிடம் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இலங்கை அணி இழந்தது.
அரைஇறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி.. கேப்டன் தசுன் ஷனகா வெளியிட்ட பரபரப்பு பதிவு
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இதைத்தொடர்ந்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த உலகக் கோப்பையில் நாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போனதற் காக மிகவும் வருந்துகிறேன். உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இங்கிலாந்திடம் தொடரை இழந்தது உள்பட பல சவால்களை சந்தித்தாலும், ஒரு போட்டியை நடத் தும் நாடாக தெளிவான திட்டமிடல் மற்றும் வலுவான நம்பிக்கையுடன் இந்த போட்டியை அணுகினோம். தற்போதைய நிலைமையை எங்களால் நிச்சயம் மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

என் மீதும், அணி மீதும் உங்களுக்கு இருக்கும் வேதனை, கோபத்தை நன்றாக அறிவேன். இதனால் எழுந்துள்ள அனைத்து விதமான விமர்சனங்களையும், கருத்துகளையும் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் (ரசிகர்கள்) எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல உறுதிபூண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கையை விட்டு விடாதீர் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com