சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வி: ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித்


சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வி: ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித்
x

Image Courtacy: ICCTwitter

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' அணியான இந்தியா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த அரைஇறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி வரை வந்து தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் ஒருநாள் போட்டிகளில் [2010-2025) இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று நடந்த இந்தியாவுடனான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஸ்டீவ் சுமித் 73 ரன்கள் எடுத்தார்.

கடந்த 2010ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியுடன் 5,800 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். மேலும் 28 விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஸ்மித் வீழ்த்தி உள்ளார்.

2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் ஸ்மித் இடம்பெற்றிருந்தார். 2015 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பேட் கம்மின்ஸ் காயமடைந்து விளையாட முடியாமல் போனதால், இடைக்கால கேப்டன் பதவியை வகித்தார்

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித்தின் வயது 38 ஆக ஆகிஇருக்கும். அப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் நிலையில் இருப்பாரா என்பது நிச்சயம் இல்லை. இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை மனதில் வைத்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஸ்மித்தின் முடிவு குறித்து தேர்வுக்குழுத் தலைவரான ஜார்ஜ் பெய்லி கூறுகையில், "ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஸ்டீவின் முடிவை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரிக்கிறோம். ஸ்டீவ் பல சந்தர்ப்பங்களில் தனது மீதமுள்ள விளையாட்டு வாழ்க்கையை ஒவ்வொரு தொடராக அணுகுவதாகக் கூறியுள்ளார், இந்த நிலைப்பாடு மாறவில்லை, மேலும் அவரின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது.

167 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக அவரது சாதனை முன்மாதிரியானது, மேலும் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றவராக இந்த வடிவத்தை விட்டு வெளியேறுவது சிறந்த ஆஸ்திரேலிய ஒருநாள் வீரர்களில் ஒருவராக அவரது பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகிறது, ஸ்டீவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறார், மேலும் அவர் அணியின் ஒருங்கிணைந்த வீரராகவும் தலைவராகவும் இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story