சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்


சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

லார்ட்ஸ்,

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.இதனையடுத்து 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

1 More update

Next Story