கேட்ச் பிடிக்க முயன்றபோது ஸ்டீவ் ஸ்மித்திற்கு காயம்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
கேட்ச் பிடிக்க முயன்றபோது ஸ்டீவ் ஸ்மித்திற்கு காயம்
Published on

லண்டன்,

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிக்கா வெற்றிபெற இன்னும் 162 ரன்கள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

இந்நிலையில், இப்போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. 19.2 ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை தென் ஆப்பிக்க கேப்டன் பவுமா விளாச முற்பட்டார். அப்போது, அந்த பந்து ஸ்லிப்பில் கேட்ச் நோக்கி சென்றது. ஸ்லிப்பாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்ட நிலையில் அவர் அந்த கேட்சை பிடிக்க முயன்றார். ஆனால், பந்து ஸ்மித்தின் வலது கையில் வேகமாக பட்டு கீழே விழுந்தது. இதில், ஸ்மித்தின் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சாம் கொன்ஸ்டாஸ் களத்திற்கு வந்துள்ளார். கையில் ஏற்பட்ட காயம் தொடர்பாக ஸ்மித் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com