சச்சின், விராட் கோலியின் சாதனைகளை சூர்யவன்ஷி முறியடிப்பார் ...ஸ்டெயின் நம்பிக்கை

சூர்யவன்ஷியின் வரவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சச்சின், விராட் கோலியின்  சாதனைகளை சூர்யவன்ஷி முறியடிப்பார் ...ஸ்டெயின் நம்பிக்கை
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் அசத்தி அனைவரது கவ னத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். பீகாரை சேர்ந்த 15 வயது சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண் டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

இந்த அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கிரிக்கெட் அரங்கம் அதிரப்போவது உறுதியாக உள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் வரவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சச்சின், விராட் கோலியின் சாதனைகளை சூர்யவன்ஷி முறியடிப்பார் என தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிவதற்குள் நட்சத்திர வீரர்களான சச்சின் தெண்டுல்கர், விராட் கோலியைவிட மிகப்பெரிய சாதனைகளை படைப்பார். தற்போது உள்ள சர்வதேச வீரர்களை காட்டிலும் சிறப்பான திறமை அவருக்கு உள்ளது. ஆச்சர்யம் அளிக்கக் கூட சிறுவனாக உள்ள அவர் இந்திய கிரிக்கெட் சொத்தாக இருப்பார். என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com