

சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் நியூ சண்டி காரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.பிரியன்ஷி ஆர்யா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட பிரப்சிம்ரன் சிங் அரைசதமடித்து அசத்தினார்.
பின்னர் ஸ்டாய்னிஸ் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் அரைசதமடித்து 22 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.