சர்ச்சையில் சிக்கிய ஸ்டோக்ஸ், அட்கின்சன்: நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு

நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சர்ச்சையில் சிக்கிய ஸ்டோக்ஸ், அட்கின்சன்: நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு
Published on

லண்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் ஓவலில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் ஆகியோர் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியை கொண்டாடுவதற்காக லண்டனில் உள்ள இரவு விடுதிக்கு சக வீரர் அட்கின்சனுடன் பென் ஸ்டோக்ஸ் சென்றார். அங்கு உள்ளூரில் பிரபலமான ரக்பி கிளப்பை சேர்ந்த வீரர் ஒருவருடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 'முது விசாரணை நடக்கிறது. சம்பவம் நடந்த போது பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் ஆகி யோர் இரவு விடுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது கூடுதல் தகவல்களை கேட்டு இருக்கிறோம். 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்' என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com