

லண்டன்,
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஷஸ் (Ashes 2025-26) தொடரில் இங்கிலாந்து அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்தின் அணுகுமுறையை விமர்சித்தார். பதிலுக்கு மெக்கல்லம், ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்ட உத்தியைத் (Bazball) சரியாகக் கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்த சூழலில், புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் பரவிய நிலையில், தற்போது பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இருவரும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்து இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம், மெக்கல்லம் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை வரை இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.