பந்து தாக்கியதில் ஸ்டோக்ஸ் பலத்த காயம்: ரசிகர்கள் அதிர்ச்சி

கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
பந்து தாக்கியதில் ஸ்டோக்ஸ் பலத்த காயம்: ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

லண்டன்,

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் டர்ஹாம் அகாடமியில் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீரர் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் முகத்தில் தாக்கியது. இதில் அவரது வலது கண் பகுதியில் வீக்கம், கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தனது காயத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோக்ஸ், "அந்தக் கிரிக்கெட் பந்தின் நிலையை நீங்கள் பார்க்க வேண்டும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com