

புது டெல்லி,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தங்களது சொந்த நாட்டிற்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணியினர், போட்டிகளை முடித்துவிட்டு துபாய் வழியாக ஹராரே திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் தற்போது டெல்லியில் தங்கியுள்ளனர்.
வரும் 4ம் தேதி வரை அவர்கள் டெல்லியிலேயே தங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் வகையில் மாற்று விமான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.