தசைப்பிடிப்பால் அவதி: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹசரங்கா விலகல்

ஹசரங்கா விலகல், இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
தசைப்பிடிப்பால் அவதி: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹசரங்கா விலகல்
Published on

கொழும்பு,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த் திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தசைப்பிடிப்பால் பாதிக்கப் பட்டார். 'ஸ்கேன்' பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இடது தொடையில் தசை நார் கிழிந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான துஷன் ஹேமந்தா சேர்க்கப்பட் டுள்ளார். இதற்கு உலகக் கோப்பை தொழில்நுட்ப கமிட்டி அனுமதி அளித்துள்ளது. ஹசரங்கா விலகல், இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com