எஸ்.ஏ. டி20: சன்ரைசர்சுக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பார்ல் ராயல்ஸ்

டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டான் லாரன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
எஸ்.ஏ. டி20: சன்ரைசர்சுக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பார்ல் ராயல்ஸ்
Published on

டர்பன்,

4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் 2வது தகுதி சுற்றில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.. அதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டான் லாரன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கைல் வெர்ரைன் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார்.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் செனுரான் முத்துசாமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கி விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com