ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த ஐதராபாத்

ஐதாராபாத் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.
ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த ஐதராபாத்
Published on

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதாராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசன் 52 ரன்களும், அபிஷேக் சர்மா 48 ரன்களும், டிராவிஸ் ஹெட் 46 ரன்களும், நிதிஷ் ரெட்டி 39 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் அந்த அணியின் பிளசிங் முசர்பானி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்சை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் வெற்றியை ருசித்தது. கொல்கத்தா தரப்பில் அந்த அணியின் ரகுவன்ஷி அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் ஜெயதேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளையும், இஷன் மலிங்கா, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com