ஐபிஎல் : வரலாற்று சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்... டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை ஒன்றை படைத்தது.
ஐபிஎல் : வரலாற்று சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்...  டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
Published on

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரின் தங்களது 14-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மோதின. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆர்சிபி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் கிளாசன் ஆகியோர் அரைசதங்கள் விளாசினர்.

Also Read
பிபா உலகக் கோப்பைக்கு முன்... மெக்சிகோவில் பீலேவுக்கு 31 அடி உயர சிலை திறப்பு
ஐபிஎல் : வரலாற்று சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்...  டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

இந்த ஆட்டத்தில் 200 ரன்களைக் கடந்ததன் மூலம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை ஒன்றை படைத்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒரே தொடரில் 9 முறை 200-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் படைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 2025 மற்றும் நடப்பு சீசன் என இரண்டிலுமே தலா 8 முறை 200 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com