

துபாய்,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது. ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.