ஐபிஎல் : கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!

பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன.
ஐபிஎல் : கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!
Published on

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த முறை 2 புதிய அணிகளுடன் கோலாகலமாக இந்த தொடர் நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் அடுத்தடுத்து இடங்களில் இருக்கின்றன. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த பட்டியலில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறும்.

ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அணிக்கு புதிய கேப்டனாக புவனேஸ்வர் குமார் செயல்பட அதிகவாய்ப்புள்ளது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com