ஐபிஎல்: எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்: எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
Published on

சண்டிகர்,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் நுழைந்துள்ளன. இதில், நேற்று நடந்த குவாலிபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் மைதானத்தின் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்குள் நுழைந்து குஜராத் அணியுடன் மோதும். குவாலிபையர் 2 சுற்றில் வெற்றிபெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனால் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com