ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தொடக்கத்தில் அபிஷேக் சர்மா சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Published on

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் அபிஷேக் சர்மா சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹெட் 23 ரன்களும் , இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 59 ரன்களில் வெளியேறினார்.பின்னர் கிளாசன் அரைசதம் அடித்தார்.

இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ஓவர்டன் , காம்போஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ரன் இல்லாததால் வெற்றிக்கு மிக அருகில் சென்றும் சிஎஸ்கே தோற்றது. 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே சார்பாக அதிகபட்சமாக மேட் சார்ட் 34, ஆயுஷ் மாத்ரே 30, சர்பராஸ் கான் 25, சிவம் துபே 21,ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் 7 ரன்னில் அவுட் ஆனார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com