பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டம்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருதை வென்றது யார்..?


பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டம்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருதை வென்றது யார்..?
x

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

துபாய்,

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் 19 பந்துகளில் 30 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story