சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு ரன்கள் 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு ரன்கள் 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. சைபர்ட் 35 ரன்களும், ஆலன் 29 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. பிலிப்ஸ் தன் பங்குக்கு 39 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ரஷித், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com