சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 164 ரன்கள் எடுத்தது.
சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணியில் சஹிப்சதா பர்ஹான் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதமடித்தார். பாபர் அசாம் , பகர் ஜமான் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 164 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் டாசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com