சூப்பர் 8 சுற்று: இலங்கை அபார பந்துவீச்சு.. இங்கிலாந்து 146 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
சூப்பர் 8 சுற்று: இலங்கை அபார பந்துவீச்சு.. இங்கிலாந்து 146 ரன்கள் சேர்ப்பு
Published on

பல்லேகல்லே

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி முதலில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை விளையாடி வருகின்றன. பல்லேகல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் திணறியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பட்லர் (7), பெத்தேல் (3), பெண்டன் (6), புரூக் (14), சாம் கரன் (11), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்தார். அவரது சிறப்பான பங்களிப்பால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் வெல்லாலகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com