சூப்பர் 8 சுற்று: பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை: இங்கிலாந்து அபார வெற்றி

இலங்கை அணி 15.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சூப்பர் 8 சுற்று: பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை: இங்கிலாந்து அபார வெற்றி
Published on

பல்லேகல்லே

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி முதலில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகளை விளையாடி வருகின்றன. பல்லேகல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் திணறியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பட்லர் (7), பெத்தேல் (3), பெண்டன் (6), புரூக் (14), சாம் கரன் (11), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்தார். அவரது சிறப்பான பங்களிப்பால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் வெல்லாலகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

இலங்கை அணி 2.4 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் பதும் நிசங்கா அவுட் ஆனார். அவர் 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 4 ரன்னிலும், பவன் ரதனாயகே (0) ரன் எதுவும் எடுக்காமலும், தொடக்க வீரர் கமில் மிசாரா 6 ரன்னிலும், டுனித் வெல்லாலே 10 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் வில் ஜேக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com