

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் ரியான் பராக்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரியான் பராக்கின் தோள்பட்டை காயத்திற்கான அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரியான் பராக் கூறியதாவது,
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது.கடந்த இரண்டு ஆண்டுகள் நான் சற்றும் எதிர்பாராத விதமான சவால்களை எனக்கு அளித்தன. நல்ல நாட்களும் இருந்தன, விரக்தியளிக்கும் நாட்களும் இருந்தன; ஒரு போட்டியை முழுமையாக விளையாடி முடிப்பதே பெரும் சவாலாக இருந்த நாட்களும் இருந்தன.
இப்போது அடுத்த கட்ட சவால் காத்திருக்கிறது - உடல் தேறுதல், மறுவாழ்வுப் பயிற்சிகள் மற்றும் பொறுமை.எனக்கு மிகவும் பிடித்தமான அந்தச் செயலில் விரைவில் மீண்டும் ஈடுபடுவேன், விரைவில் சந்திப்போம். என தெரிவித்துள்ளார்.