ரோகித் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் புகழாரம்


ரோகித் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் புகழாரம்
x

ரோகித் சர்மாவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா அழைத்து சென்றுள்ளார். இது மிகப்பெரியது. ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.அவர் கடினமாக உழைக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடும் அவருக்கு என் வாழ்த்துகள்.என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

1 More update

Next Story