சூர்யகுமார் யாதவ் அரைசதம்... டெல்லிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார்.
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பையின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 5 ரன், ரியான் ரிக்கெல்டன் 25 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த வில் ஜேக்ஸ் 21 ரன், திலக் வர்மா 27 ரன், ஹர்திக் பாண்ட்யா 3 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார். தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com