அபிஷேக் ஷர்மா குறித்து சூர்யகுமார் யாதவ் அளித்த ‘நச்’ பதில்

அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் பார்ம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
அபிஷேக் ஷர்மா குறித்து சூர்யகுமார் யாதவ் அளித்த ‘நச்’ பதில்
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மார்க்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை நாளை (22-ந் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர் அலி கான் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிராக சல்மான் ஆகா பந்துவீச்சிலும், நெதர்லாந்துக்கு எதிராக ஆர்யன் தத் பந்துவீச்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதனால் அவரது பேட்டிங் பார்ம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறி இருப்பதாவது; "அபிஷேக் ஷர்மாவை பற்றி கவலைப்படுபவர்களை குறித்து நான் கவலைப்படுகிறேன். அவருக்கு எதிராக விளையாட உள்ளவர்களை நினைக்கும்போது எனக்கு இன்னும் கவலையாக உள்ளது.”

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com