ரஞ்சி கோப்பை மும்பை அணியில் இடம் பிடித்த சூர்யான்ஷ் ஷெட்ஜ்

இந்திய அணிக்காக மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தற்போது மும்பை அணியின் ரஞ்சி கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

 ரஞ்சி கோப்பை  மும்பை அணியில் இடம் பிடித்த சூர்யான்ஷ் ஷெட்ஜ்
Published on: 

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் முனைப்பில் மும்பை அணியின் இளம் ஆல்ரவுண்டர் சூர்யன்ஷ் ஷெட்ஜ் உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட 23 வயதான ஷெட்ஜ், பந்துவீச்சில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கடைசிப் போட்டியில் 60 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தற்போது மும்பை அணியின் ரஞ்சி கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார். அக்டோபர் 18 முதல் 21ஆம் தேதி வரை பிலாஸ்பூரில் நடைபெறவுள்ள ஹிமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாகப் போட்டிகளில் பங்கேற்காததும், நியூசிலாந்து தொடருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான தயாரிப்பில் சில வீரர்கள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதும் ஷெட்ஜுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com