ஐ.பி.எல்.லில் பெரிய சாதனையை படைக்க சூர்யவன்ஷிக்கு 6 சிக்சர்களே இன்னும் தேவை

15 வயதில் 27 இன்னிங்ஸ்களில் விளையாடி 99 சிக்சர்களை அவர் அடித்துள்ளார்.
ஐ.பி.எல்.லில் பெரிய சாதனையை படைக்க சூர்யவன்ஷிக்கு 6 சிக்சர்களே இன்னும் தேவை
Published on

ஜெய்ப்பூர்

ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா உள்ளார். அவர் 2024-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் இந்த சாதனையை படைத்துள்ளார். 42 சிக்சர்களுடன், 36 பவுண்டரிகளை அவர் அடித்திருக்கிறார்.

அந்த தொடரில், 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 484 ரன்களை எடுத்த அவர், அதிக அளவாக 75 ரன்களை அடித்துள்ளார். இந்த நிலையில், இந்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் இன்றிரவு நடக்க உள்ள போட்டியில், இந்த சாதனையை படைப்பதற்கான வாய்ப்பு சூர்யவன்ஷிக்கு உள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் பெரிய சாதனைகளை படைக்க அவருக்கு இன்னும் 6 சிக்சர்களே தேவை.

நடப்பு 2026-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரில் விளையாடி வரும் அவர், இதுவரை 9 போட்டிகளில் மொத்தம் 400 ரன்களை எடுத்துள்ளார். ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 34 பவுண்டரிகள், 37 சிக்சர்களையும் அடித்துள்ளார். இதனால், இன்னும் 6 சிக்சர்களை விளாசினால், அபிஷேக்கின் சாதனையை அவர் முறியடிப்பார்.

அதனுடன் அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். 15 வயதில் 27 இன்னிங்ஸ்களில் விளையாடி 99 சிக்சர்களை அவர் அடித்துள்ளார். இதனால், 20 வயதுக்குள் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

நூறு சிக்சர்கள் என்ற சாதனையை படைக்க அவருக்கு இன்னும் ஒரே ஒரு சிக்சர் தேவையாக உள்ளது. அது பல தலைமுறைகளை கடந்த சாதனையாக இருக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com